மதவாத சக்திகளுக்கு எதிராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் ; கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு….

தமிழக பாஜவினரின் அத்துமீறல்களை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீதான தாக்குதலை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மெர்சல் பட விவகாரத்தில் கருத்து தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனை காழ்புணர்ச்சியுடன் விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனை கண்டித்து அமைதி வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதைக்கண்டித்து, கரூர் மற்றும் மயிலாடுதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை எரித்து பாஜகவினர் அத்துமீறல் மற்றும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த மதவாத சக்திகளின் ஆதிக்க போக்கை கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *