ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை ரூ.13.50ல் இருந்து கிலோ ரூ.25 ஆக தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென சர்க்கரை விலையை உயர்த்தியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரேஷனில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுகசார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பாக வருகிற 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்அறிவித்துள்ளார்.
2017-10-29

