கரூரில் காவல்துறையினர் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜக வினரை கண்டித்து நவம்பர் 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து வருகிற 30ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கரூரில் ஆர்பாட்டம் வருகின்ற நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

