70 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் – நடப்பு கல்வியாண்டில் வழங்க அரசாணை வெளியீடு

பள்ளி மாணவர்களுக்கு QR Code-உடன் கூடிய பல்வேறு பயன்பாட்டுக்கான ஸ்மார்ட் கார்ட் நடப்புக் கல்வி ஆண்டில் வழங்குவது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. Gfx in ரத்த வகை, முகவரி, புகைப்படம், QR Code, தொடர்பு எண் உள்ளிட்டவை கொண்ட ஸ்மார்ட் கார்டுகள் 70 லட்சத்து 59 ஆயிரத்து 952 மாணவர்களுக்கு  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வருகை குறித்து பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, சம்பந்தப்பட்ட மாணவரின் கல்வி விவரங்களை இணையதளம் வாயிலாக பெற முடியும். ஆபத்துக்காலத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி இடைநிற்றலை துல்லியமாக கணித்து தடுக்க முடியும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *