“எண்டர்டெயின்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா” என்று அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் மூலம் 56 கிராம் நகையை ஏமாற்றி வாங்கிச் சென்ற சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்துள்ளது. ஜோதன் நகரில் உள்ள நகைக் கடைக்கு காரில் வந்த ஒரு ஜோடி 56 கிராம் நகைகளை வாங்கியுள்ளது.
இதற்கான தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை காரில் இருந்து எடுத்து வந்து அந்த ஜோடி, நகைக் கடையின் உரிமையாளர் ஷியாம் சுந்தர் வர்மாவிடம் கொடுத்து விட்டு உடனடியாக புறப்பட்டுச் சென்றது. ரூபாய் நோட்டுகளை பார்த்த போது அதில் எண்டர்டெயின்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்டு இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், காவல்துறையில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து ஏமாற்று ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

