189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நீக்கம்

இந்தோனேஷியாவின் லயன் ஏர் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் அந்நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநர் நீக்கப்பட்டுள்ளார்.

ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினங்  என்ற நகருக்கு சென்ற பயணிகள் விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்த பயணிகள், அவர்களின் உடைமைகள் விமான பாகங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் நிலையில் விமானம் சில மாதங்களுக்கு முன்புதான் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநரை நீக்கி இந்தோனேஷிய போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு தொழில் நுட்ப வல்லுநர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *