பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்றதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் அழைப்பு விவரங்களை துப்பறிவாளர்கள் பெற்று அவற்றை வழக்கறிஞர்களுக்கு விற்ற வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வழக்கில், வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் ((Rizwan Siddiqui)) உள்ளிட்ட 12 பேரை கைது செய்து தானே குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நடிகை கங்கனா ரனாவத், ஹிருத்திக் ரோசனின் செல்போன் எண்ணை ரிஸ்வானிடம் கொடுத்து அழைப்பு விவரங்களை கேட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அனுமானத்தின் அடிப்படையில் எதையும் கூற வேண்டாம் என காவல்துறைக்கு கங்கனா ரனாவத்தின் சகோதரியான ரங்கோலி சாண்டல் ((Rangoli Chandel)) பதிலடி கொடுத்துள்ளார்.

