இந்திய விமானப்படையின் 86வது ஆண்டு தினம் கிழக்குப் பிராந்தியத்தில் கொண்டாடப்பட்டது. மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கில் ஏர் ஃபெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் எம் ஐ 17 ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள், எஸ் யு 30 எம் கே ஐ ரக போர் விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.
தொடர்ந்து ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டு விமானப்படையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.

