இந்தோனேஷியாவின் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 30 முதல் 40 மீட்டர் ஆழத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளாகும் முன் விமானி மீண்டும் தரையிறங்க அனுமதி கேட்டதாகக் கூறப்படும் நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் கருப்புப் பெட்டி உள்ளிட்ட விமானத்தின் முக்கிய பாகங்கள் விமானம் விழுந்த பகுதியில் கடலில் 30 முதல் 40 மீட்டர் ஆழத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

