விஞ்ஞான அறிவு உலகளாவியது, ஆனால் தொழில்நுட்பம் உள்ளூர் சார்ந்ததாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா – இத்தாலி இடையிலான தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய அவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களின் முடிவுகள் ஆராய்ச்சி மையங்களுக்கு மட்டும் பயன் படாமல், மக்களை சென்றடைய வேண்டும் என்றார். இதனால்தான், விஞ்ஞான அறிவு உலகளாவியது என்றாலும் ஆனால் தொழில்நுட்பம் உள்ளூராக இருக்க வேண்டும் என தாம் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்வதேச சவால்களை சமாளிக்க இரு நாடுகளும் கூட்டணி அமைக்கலாம் என்ற மோடி, உரிய காலம் வரும் போது இந்தியா – இத்தாலி இடையிலான ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றார். எளிதாக வாழ்வதற்கான வசதியை தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ளது என்றும் இதற்கு எடுத்தக்காட்ட மாதம் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை நடக்கிறது என்றும் தெரிவித்தார்.
