வாகன உரிமம், பழகுனர் உரிமம், பெறுதல், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இணையதளம் மூலம் பணம் செலுத்தும் முறை துவங்கியுள்ளது- சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த சேவைகளை துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னையில் 80 மின்சாரப் பேருந்துகளும் கோவையில் 20 மின்சாரப் பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பேருந்துக்கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டு விட்டதால் மீண்டும் உயர்த்தப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்.சி.புக்குகளுக்கு ஸ்மார்ட் கார்டு முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். பள்ளிப் பாடத் திட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடம் இடம் பெற இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

