வரும் 29ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பு….

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகளை விடுமுறை தினங்கள் நீங்கலாக 13 நாட்கள் நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர், நேற்று முடிவடைந்து தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *