வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் இல்லை; மத்திய நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்…

விவசாயிகளுக்கான கடன் இலக்கு. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள் ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.

2018-2019ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார் அப்போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறி வருவதாக சுட்டிக் காட்டிய அவர், நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார். விவசாயிகளின் நலனில் அக்கறைக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக உயரும் என்று தெரிவித்துள்ளார் வரும் ஆண்டில் விவசாயத்துறையின் அடிப்படை கட்ட மைப்புக்கு என்று சுமார் 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்தார். இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக பாஜக அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளால் மாற்றம் வந்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பாஜக அளித்த வாக்குறுதிகளையும், செய்யப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார். ஏழ்மையை ஒழித்து இந்தியாவின் வளர்ச்சியை தலைநிமிரச் செய்வோம் என்று ஆட்சிப்பொறுப்பேற்ற போது உறுதியளித்த்தாகவும் . பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதால் இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் மாற்றம் வந்துள்ளது.

பொருளாதார சீர்திருத்தத்தில் கடந்தசில ஆண்டுகளாக எடுத்து வந்த முயற்சிகள் கைகொடுத்துள்ளதாகவும், நிர்வாக சீர்திருத்தத்தால் அந்நிய முதலீடு அதிகரித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எளிமையான பல அறிவிப்புகளால் தொழில் முனைவோருக்கான வர்த்தகம் செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டர் முறையிலான பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்றும் ஜேட்லி தெரிவித்தார். வரும் ஆண்டில் விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு என்று சுமார் 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விரைவில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் வருவாயும் உயரும் என்றும் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *