ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து…..

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், டிசம்பர் மாதத்திற்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் கைபாவையாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய திருநாவுக்கரசர், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *