ரஷ்யாவில் பேருந்தும், மினிபேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பயணிகள் பலியாகினர்.
அந்நாட்டில் திவேர் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தும், ஒரு மினி பேருந்தும் எதிர்பாராதவிதமாக மோதின. இந்த விபத்தில் 2 வாகனங்களும் கடுமையாக சேதமுற்றன. அவற்றில் இருந்த 12 பயணிகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமுற்றனர். அவர்கள் அனைவரும் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

