மகாராஷ்டிராவின் யவத்மால் பகுதியில் 13 உயிர்களைப் பலி கொண்ட அவனி என்ற பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இது தொடர்பாக புலியை பார்த்ததும் சுட உத்தரவிட்டிருந்தது. கடந்த 2 வருடமாகவே யவத்மால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது அவனி என்னும் பெண் புலி. பெண் புலியான அவனியிடம் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரும் பதட்டமாகவே இந்தப் பகுதி நிலவி வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பலரது உயிர்களைப் பறித்து வரும் இந்தப் புலியை கண்டதும் சுட உத்தரவிட்டது.
இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு யவத்மால் வனப்பகுதியில் வேட்டையில் இறங்கிய வனத்துறையினர் பெண் புலி அவனியை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அவனிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாக்கும்.

