பிரதமர் மோடியின் தந்தை பெயர் யாருக்கும் தெரியாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது. மோடியின் தாயாரின் வயதை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயுடன் ஒப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் முட்டேம்வர் , பிரதமராவதற்கு முன்னர் மோடியை யாரென்று எவருக்கும் தெரியாது எனவும், தற்போது மோடியின் தந்தை யார் என்று யாருக்கும் தெரியாது எனவும் பேசியுள்ளார். ஆனால் ராகுல் காந்தியின் ஐந்து தலைமுறையும், மக்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பா.ஜ.க., கண்டனம் தெரிவித்துள்ளது.

