தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை தூண்டிவிட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் முதலில் அரசைப் பாராட்டுவது போல பாராட்டி விட்டு பின்னர் புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த போது மக்களை போராட்டத்துக்குத் தூண்ட தி.மு.க.வினரை தயார்படுத்திவிட்டுச் சென்றுவிட்டதாக கூறினார்.
2018-11-20

