மும்பை, பெங்களூரு அளவுக்கு சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 6 தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஓட்டேரி, முடிச்சூர், ஆதனூர், ஏவிஎம் நகர், வரதராஜபுரம், மாதா நகர் இணைப்புச் சாலை, பள்ளிக்கரணை மற்றும் தாம்பரம் அடுத்த செம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை நீர் செல்லும் வடிகால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக அளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை, பெங்களூரு அளவுக்கு சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *