மும்பை பாந்த்ராவில் உள்ள குடிசைப் பகுதியில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
மும்பை பாந்த்ரா தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள லால்மதி குடிசைப் பகுதியில் ஒரு வீட்டில் தீப்பற்றியது. காற்று வேகமாக வீசியதால் தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.
இதனால் அந்தப் பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. தகவல் அறிந்து மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.

