மீண்டும் தொடர்கிறது இலங்கை கடற்படையின் அட்டூழியம்… நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக அட்டூழியம் செய்து வருகிறது. இந்நிலையில் நெடுந்தீவு அருகே 3 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12பேரை இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். மேலும் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை நாடாளுமன்றத்தில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *