தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் இரண்டு உதவி காவல்ஆய்வாளர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலிசார் பொதுமக்கள் உடைமைகளை பரிசோதித்து அனுப்பிக்கெண்டு இருந்த நிலையில் இன்று பிற்பகல் மகேஸ்வரி (37) தனது இரண்டு குழந்தைகளுடன் மண்ணென்ணை உற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் தனது பெயர் மகேஸ்வரி என்றும் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது கணவர் மாதேஸ் என்பவர் ஜருகு கிராமத்தை சேர்ந்தவர்கள். குடும்பத்தகறாரு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் மாதேஸ் பெங்களூருவில் இரண்டாவது மணம் செய்துகொண்டு மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இது குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஏற்கனவே காவல் துறையினர் இவர் கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஏரியூர் காவல் நிலைய வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பத்தை தொடர்ந்து கடந்த வாரம் நிலத்தகராறு காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருவேறு குடும்பத்தினர் ஆறுக்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தை தொடர்ந்து இன்றும் தீக்குளிக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை… ஏற்படுத்தியுள்ளது

