மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் சிறைத் தண்டனை ரத்து

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் சிறைத் தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாமீன் அப்துல் கய்யூம் அதிபராக பதவியேற்ற பின் அப்து நஷீத் பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார். நஷீத் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என யாமீன் அப்துல் கய்யூம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முஹம்மது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார். இப்ராகிம் முகமது சோலி விரைவில் அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில் முகமது நஷீத்தின் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *