தமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 94 லட்சத்து 47 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களில், 1 கோடியே 93 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1 லட்சத்து 47 ஆயிரம் பேரும் விரைவில் ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் விதமாக மார்ச் 1ம் தேதிக்குள் ஆவணங்களை வழங்கி ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 1ம் தேதிக்குப் பின்னர் ஸ்மார்ட் அட்டைகள் இருந்தால் மட்டுமே நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
2018-01-26

