மழை பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மூன்று மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

