கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 6 நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், கடந்த ஐந்து நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 3-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என முதலில் தெரிவித்தது. இந்நிலையில், நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 25-ம் தேதி நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

