மத்திய அரசு திட்டங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் மட்டும் செய்கிறார்கள்-தம்பிதுரை

மத்திய அரசு திட்டங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் மட்டும் செய்கிறார்களே தவிர, மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

கரூரை அடுத்துள்ள வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 18 ஆயிரம் கோடியே இதுவரை வழங்கப்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள் செய்ய போதிய நிதி இல்லை எனக் கூறினார்.

மேலும் கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிப்பதாகவும் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *