மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு, திண்டுக்கல் மாநகராட்சிகளை ஸ்மார்ட்சிட்டிக்கான 4-ம் கட்ட தேர்வுக்காக மத்திய அரசிடம் கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அம்ரூத் திட்டம் என்ற அடல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் மாற்றத்துக்கான திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழகம் நாட்டிலேயே 2-ம் இடத்தில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *