ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விளையாட்டு மைதானம் இல்லாத அரசு பள்ளிகளில் மைதானங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் ஒப்புதலுடன் அரசு பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
2017-10-28

