மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதத்தில், சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைவதோடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதையடுத்து, இந்த 4 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், இன்று பிற்பகலில் டெல்லியில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தமிழகத்தில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *