பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மன்னிப்பு கோரினார் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். நிதிப்பற்றாக்குறையினால் வேறு வழியின்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக பேட்டி

போக்குவரத்துத்துறையில் ஏற்பட்டிருக்கும் நிதிப்பற்றாக்குறையினால் வேறு வழியின்றியே பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவான கட்டணத்தில் நிறைவான பேருந்து சேவை வழங்கப்படுவதாகக் கூறினார். மேலும் போக்குவரத்துத்துறையில் ஏற்பட்டிருக்கும் நிதிப் பற்றாக்குறையினால் வேறு வழியின்றியே பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

முன்னதாக கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், 7 ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாகவும், கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *