பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும், இதற்கு அனைத்து மாநிலங்கள் மத்தியிலும் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று நம்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், 19 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது என்று கூறினார். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குக் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு என்ன தடை? என அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அருண்ஜேட்லி, இது மத்திய மற்றும் மாநில அரசுகள் பேசி முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என்று கூறினார். மாநிலங்களுக்கு இடையே இது தொடர்பாக விரைவிலோ அல்லது தாமதமாகவோ ஒருமித்த கருத்து ஏற்படும் என தாம் நம்புவதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

