தீபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

