பெட்ரோல்,டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே மீடூ புகார்கள் கூறப்படுகின்றன : ராஜ் தாக்கரே

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே மீடூ புகார்கள் வருவதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறி உள்ளார்.

அமராவதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடிகர் நானா படேகர் அநாகரிகமான பேர்வழி என்றாலும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பார் என தாம் கருதவில்லை என்றார்.

எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே மீடூ புகார்கள் எழுப்பப்படுவதாக ராஜ்தாக்கரே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *