பெங்களூர்ச் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகாரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் சென்னையில் ஜெயலலிதாவின் வீடு, ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர்.
சசிகலா தொடர்புடைய நிறுவனங்கள், சசிகலாவின் உறவினர் வீடுகள், அவர்களுக்குத் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றில் நடந்த ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், விவேக், கிருஷ்ணப்பிரியா ஆகியோரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பெங்களூர்ச் சிறையில் உள்ள சசிகலாவிடம் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் 5பேர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

