புறவழிச்சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டப்பணிகள் அற்பணிப்பு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் 73 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளைம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தஞ்சாவூரில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புள்ளி 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரு வழித்தடபுறவழிச்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், புறவழிச்சாலை ஆலக்குடியில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; விழுப்புரம்மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், திருவெண்ணைநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலம்ஆகியவற்றை திறந்து வைத்தார். மொத்தம் 73 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅற்பணிப்பு செய்தார். மேலும் வைகை அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் இருந்து வருகின்ற 1ஆம் முதல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *