புயல் பாதித்த பகுதிகளுக்கு பார்வையிட வராத பிரதமருக்கு வைகோ கண்டனம்

கஜா புயல் தொடர்பாக மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.  தமிழக அரசின் மீட்பு பணிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனம் திறந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெற்பயிர்களை அரசு அதிகாரிகள் திரும்பப் பெற்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார். புயல் நிவாரண, மீட்பு பணிகளில் அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் அயராது பணியாற்றும் வேளையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது சரியல்ல என கூறியுள்ளார்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என்ன நியாயம்? என கேள்வி எழுப்புள்ளார். புயல் சீரமைப்பு பணிகளில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் சிறப்பான பணியாற்றியுள்ளார். புயல் பாதித்த பகுதிகளுக்கு பார்வையிட வராத பிரதமருக்கு கண்டனம் தெரிவிப்பதாகம் அவர் கூறியுள்ளார். தமிழக அரசு கோரிய நிதியுதவியில் 5 சதவீதத்தை கூட மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.  மின் விநியோகத்தை சீர் செய்ய மின் வாரிய ஊழியர்கள் உயிரை பொருட்படுத்தாமல் செயல்பட்டனர். மீட்பு பணியில் மின் வாரிய ஊழியர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என வைகோ தெரிவித்துள்ளார்.

மின்வாரியம், காவல்துறையினர் உணவு, தூக்கமின்றி பணியாற்றி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் மத்திய அரசின் குறிப்பாக பிரதமரின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளார். மேலும் 25 ஆம் தேதிக்கு மேல் தன்னுடைய தலைமையில் 10 பேர் கொண்ட ஆய்வு குழு தஞ்சை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *