புதுச்சேரி மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு பார்க்கிறது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நிலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் வளர்ச்சி ஏற்படுவதற்கு மத்திய அரசு தடையாக இருப்பதாகவும் நாராயணசாமி சாடினார்.

