புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும், மாத இறுதிக்குள் சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும்,100க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி ஓட்டுநர், நடத்துனர், பணிமனை தொழிலாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 2015ல் இருந்து தொழிலாளர்கள் சம்பளத்தில் ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். காரைக்கால் , சென்னை, விழுப்புரம், கிராம புறங்களுக்கு செல்லும் பேருந்துகள், அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாததால் கிராம பகுதியில் இருந்து வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அரசு உடனடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் காலைவரையற்ற போராட்டமாக மாறும் என ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *