புதுச்சேரியில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு

புதுச்சேரியில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மானியக் கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்றன. முதலமைச்சர் நாராயணசாமி பதில் அளிக்கையில் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் , மதுபானம் தவிர அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அரசு துறைகளில் 7600 காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாலிதீன் பைகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மணல் தட்டுப்பாட்டைப் போக்க அரசு பொது நிறுவனம் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *