புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று 5வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கிராமப்புற பயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, கடந்த 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கும், புதுச்சேரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
ஊழியர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்பாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் விடுத்த எச்சரிக்கையை நிராகரித்து, இன்று 5வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

