கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பெரியார் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்தை தெரிவித்திருந்தார், இதனையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது, இதனையடுத்து அந்த கருத்திற்கு அவர் வருத்தம் தெரிவித்தார், இந்த பிரச்சனை ஓய்ந்து ஒரு வாரமே ஆன நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியில் நள்ளிரவில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டிருப்பது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகாமையில் குண்டுக்குளம் கரையில் கடந்த 2013ம் ஆண்டு பெரியார் சிலையுடன் கூடிய பெரியார் படிப்பகமும் நிறுவப்பட்டது, இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் பெரியார் சிலையை தலை துண்டாக உடைத்து விட்டு சென்றுள்ளனர், இதனையடுத்து இன்று காலை சிலையை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தஆலங்குடி போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர், மேலும் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சிலையை உடைத்து விட்டு சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரனை நடத்தினார்,

