புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் சேர்ந்த 6 மீனவர்கள் 2 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை அப்பகுதியில் இருந்து இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதில் சவுந்தரராஜன், அன்பரசன் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த மீனவர்கள் மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2017-11-21

