பீகார் மாநில மாட்டுத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு….

கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவிற்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது, கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். இதையடுத்து, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளுக்கான தீர்ப்பு விவரம் நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், வழக்கில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் வின்டேஸ்வரி பிரசாத் உயிரிழந்ததால் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *