பனாமா பேப்பர்ஸ் மோசடி போன்று பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற மற்றொரு மோசடி அம்பலமாகியுள்ளது. இதில், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, கார்த்தி சிதம்பரம், ஜெகன்ரெட்டி, பினராய் விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் உட்பட பல இந்திய பெரும் புள்ளிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச புலனாய்வு கூட்டமைப்பு உலகின் மிக பிரபலமானவர்கள், பொருளாதார மோசடி செய்து, தங்கள் நாடுகளுக்கு வெளியே முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற இந்த ஆவணங்கள் பிபிசி, நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட 95 செய்தி நிறுவன உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டவை ஆகும்.
180 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள இந்த ஆவணத்தில், இந்தியா 19-வது இடத்தைப் பெற்றுள்ளது. 714 இந்தியா்களின் ரகசிய தகவல்கள் இந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன.
சன் டிவி ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, எஸ்.ஆர். லூப் 2 ஜி வழக்கு மற்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் பெற்றுள்ள எஸ்என்சி லவலின் வழக்கு தொடர்புடைய நிறுவனங்கள் பெயர்களும் ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம் பகுதி நேர இயக்குனர்களாக இருந்து வரும் நிறுவனங்களின் முறைகேடுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. அமிதாப் பச்சன், நீரா ராடியா, திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி தில்னாஷின், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் செய்த பண பரிவர்த்தனையும் இடம் பெற்றுள்ளது. விஜய் மல்லையா, ஜிண்டால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜாஸ், எமார் எம்.ஜி.எப், வீடியோகான் நிறுவனங்களின் பெயரும் பாரடைஸ் பேப்பரில் உள்ளது. பாரடைஸ் பேப்பரில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் அனைவரும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் கண்காணிப்பில் உள்ளதால், அரசியல் தலைவர்கள் மற்றும் பல பெரும் புள்ளிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தலைவர் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என்றும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் விசாரணை அதிகாரிகள் பட்டியலில் இடம்பெறுவர் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சர்வதேச நிறுவனங்களில், ரஷிய நிறுவனங்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் செய்த முதலீடுகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக செயலாளர் பெயர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் தலைமை நிதியளிப்பாளர் நடத்திய ரகசிய ஒப்பந்தங்கள், இங்கிலாந்தின் மகாராணி, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அசிஸ் உட்பட 120 அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியீடு
* சன் டிவி ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, எஸ்.ஆர். லூப் 2 ஜி வழக்கு
* கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் பெற்றுள்ள எஸ்என்சி லவலின் வழக்கு தொடர்புடைய நிறுவனங்கள்
* காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம் பகுதி நேர இயக்குனர்களாக இருந்து வரும் நிறுவனங்களின் முறைகேடு
* அமிதாப் பச்சன், நீரா ராடியா, திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி தில்னாஷின்
* மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் செய்த பண பரிவர்த்தனை
* விஜய் மல்லையா, ஜிண்டால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜாஸ்
* எமார் எம்.ஜி.எப், வீடியோகான் நிறுவனங்களின் பெயரும் பாரடைஸ் பேப்பரில் உள்ளது
* பாரடைஸ் பேப்பரில் இடம் பெற்றுள்ள அனைவரும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் கண்காணிப்பில் உள்ளனர்
* பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவிப்பு
* வருமான வரித்துறை தலைவர் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும்
* அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் விசாரணை அதிகாரிகள் பட்டியலில் இடம்பெறுவர்
* சர்வதேச நிறுவனங்களில், ரஷிய நிறுவனங்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் செய்த முதலீடுகள்
* அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக செயலாளர் பெயர்
* கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் தலைமை நிதியளிப்பாளர் நடத்திய ரகசிய ஒப்பந்தங்கள், இங்கிலாந்தின் மகாராணி
* முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அசிஸ் உட்பட 120 அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன

