பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் யாதவை அவரது தாயார் அவந்தி, மனைவி சேத்தன் குல் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் உள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் திங்கள் கிழமை சந்தித்தனர். பின்னர் இந்தியா திரும்பிய அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், இஸ்லாமாபாத்தில் ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது குடும்பப் பெண்களின் மத உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஜாதவ் குடும்ப பெண்களின் தாலி, வளையல்கள் மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை அகற்றச் சொன்னதாகவும் ரவீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குல்பூஷன் யாதவின் தோற்றம் அவரது உடல் நிலை குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.
2017-12-27

