அமெரிக்க கடற்படையில் முன்னாள் ஹெலிகாப்டர் ஓட்டுனராக பணியாற்றிய ஜான் ஃபீலே, தற்போதையை அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கீழ் பணியாற்ற முடியவில்லை என்றும் இதனால் பனாமா நாட்டுக்கான தமது தூதர் பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது உறுதிமொழியின் மீது தம்மால் செயலாற்ற இயலவில்லை என்றும் கவுரவம் கருதி ராஜினாமா செய்வது நல்லது என்ற நிலைக்கு தாம் தள்ளப்பட்டதாகவும் தமது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, சோமாலியா நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நைரோபி நாட்டு விவகாரங்களை கவனித்து வந்த எலிசபெத் ஷேக்கல்ஃபோர்ட் என்ற பெண் அதிகாரி சமீபத்தில் தமது பதவியை ராஜினாமா செய்தார். டிரம்ப் நிர்வாகத்தின்மீது அதிருப்தி கொண்டு பதவியை ராஜினாமா செய்யும் இரண்டாவது அமெரிக்க தூதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018-01-14

