பணிக்கு திரும்பாத போக்குவரத்து ஊழியர்கள் மீது நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய ஊதிய உயர்வு மாதிரி பட்டியலை வெளியிட்டார். அதில் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு 4 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 700 ரூபாய் வரையும், மூத்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போக்குவரத்து ஊழியர்களை தொழிற்சங்கத்தினர் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், பயிற்சி, உரிமம் பெற்ற ஓட்டுனர்களை கொண்டே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார். பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

