தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது குழந்தைகள்தான் என்றும், அவர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்துமா என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலில் ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வீட்டுக்கொரு காவலரையும், தெருவுக்கு ஒரு குழுவையும் பாதுகாப்புக்காக நிறுத்த முடியுமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மல்லாக்க படுத்துக் கொண்டு ஏதோ செய்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

