நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்று விடுதலை; 6 மாத சிறை தண்டனை முடிவுற்றதை அடுத்து இன்று விடுவிப்பு …

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்று விடுதலையாகிறார்.

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தால், அவதூறு வழக்கை கர்ணன் எதிர்கொண்டார். இதையடுத்து, நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டியில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத சிறை தண்டனை முடிவுற்றதை அடுத்து, இன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், கொல்கத்தா சிறையிலிருந்து விடுதலையாகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *